மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீடிப்பு; சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி இல்லை - முதலமைச்சர் அறிவிப்பு + "||" + Extension of ban on opening schools and colleges; Cinema theaters not allowed to operate - Chief Minister's announcement

பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீடிப்பு; சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி இல்லை - முதலமைச்சர் அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீடிப்பு; சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி இல்லை - முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நேற்று தளர்த்தி அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் சினிமா தியேட்டர்களை திறக்க தடை நீடிக்கப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை,

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்பித்தலை தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.


* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங் காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக் கான தடை நீடிக்கும்.

* புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து.

* மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றைகட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது? - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
2. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்படும்: ஜூலை 31-ந்தேதி வரை புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியிலும் ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிப்பதாகவும், நாளை மறுநாள் முதல் கடைகள் இரவு 8 மணி வரை செயல்படலாம் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
3. பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கை அனுப்ப வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து கல்வி நிறுவனங்கள், பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
4. பள்ளி, போக்குவரத்துக்கு இடையூறாக பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பள்ளி, போக்குவரத்துக்கு இடையூறாக பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பது எப்படி? பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 16-ந் தேதி பேச்சுப்போட்டி
திருச்சி சரகத்தில் கொரோனா ஊரடங்கு வேளையில் வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பது எப்படி? என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 16-ந் தேதி பேச்சுப்போட்டி நடக்கிறது.