மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2020 8:59 AM IST (Updated: 11 Sept 2020 8:59 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சேலம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,830 கனஅடியில் இருந்து 10,045 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி பாசனத்துக்கு அணையில் இருந்து விநாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாயில் விநாடிக்கு 700கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 91.89 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 54.83 டிஎம்சியாகவும் உள்ளது.

Next Story