மாநில செய்திகள்

சாமானியர்களின் முதல்வரே.., வருங்கால முதல்வரே..,என முழக்கமிட்டு ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாளர்கள் வரவேற்பு + "||" + AIADMK executive committee meeting began

சாமானியர்களின் முதல்வரே.., வருங்கால முதல்வரே..,என முழக்கமிட்டு ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாளர்கள் வரவேற்பு

சாமானியர்களின் முதல்வரே.., வருங்கால முதல்வரே..,என முழக்கமிட்டு ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்-க்கு  ஆதரவாளர்கள் வரவேற்பு
பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக செயற்குழு சாமானியர்களின் முதல்வரே என பழனிசாமிக்கும் வருங்கால முதல்வரே என முழக்கமிட்டு ஓ.பன்னீர் செல்வத்திற்கும் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
சென்னை : 

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று  காலை 9.45 மணியளவில் தொடங்கியது.

கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் கூட்ட்ம் தொடங்கியது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கு உள்ளனர்.

சென்னையில் இன்று நடைபெற உள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே என்ற பதாகைகளுடன் வரவேற்கும் துணை முதல்வரின் ஆதரவாளர்கள். துணை முதல்வரின் முகமூடி அணிந்து வந்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள். 

'சாமானியர்களின் முதல்வரே வருக வருக' என ஈபிஎஸ்க்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

வருங்கால முதல்வர் என முழக்கமிட்டு ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு அளித்தனர்.

அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.செயற்குழுவில் பங்கேற்க 284 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 284 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

கூட்டத்திற்கு முன்னதாக முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் சிலர் தனித்தனியாக சந்தித்து பேசினர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.
2. எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? நேர்முக உதவியாளர் மகாலிங்கம் தகவல்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.
3. 2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர் வெற்றி காண அயராது உழைப்போம்-எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர் வெற்றிகாண அயராது உழைப்போம் என்று தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.
5. புது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு
புது வரலாறு படைப்போம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.