திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் செய்ய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சட்டமன்றதேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, புதிய தலைமை கழக நிர்வாகிகளை நியமித்துள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் ஆர்.டி அரசகுமார் உள்ளிட்டோருக்கு திமுக முக்கிய பெறுப்புகளை வழங்கி உள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி, கழக சட்டதிட்ட விதி 18,19ம் படி சிவகங்கையை சேர்ந்த ராஜகண்ணப்பன் அவர்கள் தேர்தல் பணிக்குழு இணை தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வேலூர் ஞானசேகரன் மற்றும் வேலூர் மாவட்டம் டாக்டர் விஜய் புதுக்கோட்டையைச் சேர்ந்த பரணி கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.டி அரசகுமார் தலைமைகழக செய்தி தொடர்பு செயலாளராகவும், அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ ஜி சம்பத் அவர்கள் தீர்மான குழு செயலாளராகவும், கோவை மு. முத்துச்சாமி அவர்கள் தீர்மான குழு இணைச் செயலாளராகவும், அதே கோவையை சேர்ந்த ஆ. நாச்சிமுத்து, எம். வீரகோபால் ஆகியோர் தீர்மான குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த திரு எஸ்.கே வேதரத்தினம், ஈரோடு மாவட்டம் திரு குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் திமுக விவசாய அணி இணைச் செயலாளர்களாகவும். விழுப்புரம் மாவட்டம் திரு. அன்னியூர் சிவா, திமுக விவசாய அணி துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
அதேபோல் திருவண்ணாமலை டாக்டர் ஏ.வா.வே கம்பன், திமுக மருத்துவ அணி துணை தலைவராகவும், விழுப்புரம் மாவட்டம் டாக்டர் இரா.லட்சுமணன் அவர்கள் திமுக மருத்துவ அணி இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ஆர். பத்மநாபன் பி.எஸ்.சி பி.எல் அவர்கள் திமுக மீனவர் அணி செயலாளராகவும், தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினத்தைச் சேர்ந்த திரு. துறைமுகம் சி.புளோரன்ஸ் அவர்கள் திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த திரு.அடையாறு ஷபீல் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளராகவும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் உடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
Related Tags :
Next Story