மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 2 Nov 2020 3:58 AM GMT (Updated: 2 Nov 2020 3:58 AM GMT)

இன்றைய நிலவரப்படி அணையின் நீர்வரத்து 6,324 கன அடியாக குறைந்துள்ளது.

சேலம்,

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தநிலையில், தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 7,113 கனஅடியில் இருந்து 6,324 கன அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 99.07 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 63.64 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story