மாநில செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை + "||" + Udayanithi Stalin's tribute at the Karunanidhi Memorial

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் நாளை தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளார்.
சென்னை,

அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் தமிழகம், மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதிபட தெரிவித்தார்.

இதனிடையே தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயராகி வருகின்றன. திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுமார் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நாளை பிரசாரத்தை அவர் தொடங்க உள்ளார். இதனை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.