மாநில செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்திப்பு + "||" + Minister KP Anpalagan meets Union Home Minister Amit Shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று சந்தித்தார்.
சென்னை,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று (சனிக்கிழமை) சென்னை வந்தார். இந்த பயணத்தின் போது ரூ.62 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்ட பணிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். 

அதையடுத்து பா.ஜ.க. உயர்மட்ட குழுவினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் 2 நாள் பயணத்தை இன்று முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் அமித்ஷா டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். உயர்கல்வித்துறையில் மத்திய அரசுக்கும்-தமிழக அரசுக்கும் இடையே உள்ள பல முரண்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.