திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பு


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 12 Dec 2020 12:40 PM IST (Updated: 12 Dec 2020 12:40 PM IST)
t-max-icont-min-icon

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.

சென்னை, 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார். 

பின்னர் செய்தியாளர்கள் சந்திபில் பேசிய அவர், “ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார். புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ்-திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் ” என்று நாராயணசாமி கூறினார். 

Next Story