மாநில செய்திகள்

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? - ஆஸ்பத்திரி நிர்வாகம் பிற்பகலில் முடிவு + "||" + When is Rajinikanth discharged? - Hospital management decided in the afternoon

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? - ஆஸ்பத்திரி நிர்வாகம் பிற்பகலில் முடிவு

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? - ஆஸ்பத்திரி நிர்வாகம் பிற்பகலில் முடிவு
ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
ஐதராபாத், 

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’  படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று தெரியவந்தது. எனினும் பாதுகாப்பு கருதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது மகள் ஐஸ்வர்யா தனுசும் உடன் இருந்தார். இந்த சூழலில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடுகள் இருப்பதாகவும், இதற்காக பரிசோதனை தேவைப்படுவதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆஸ்பத்திரி பின்னர் அறிக்கை வெளியிட்டது.

அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வை தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை எனவும், நாடித்துடிப்பு உள்ளிட்ட பிற செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தேவையான சிகிச்சைகளையும் வழங்கினர். இதனால் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இரவில் நன்றாக ஓய்வு எடுத்தார். நேற்று (நேற்று முன்தினம்) இருந்ததைவிட அவரது ரத்த அழுத்தம் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கிறது. என்றாலும் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அபாயகரமான நிலை எதுவுமில்லை என்று தெரியவந்துள்ளது. அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவரது ரத்த அழுத்தத்தை கருத்தில்கொண்டு, முழுமையான ஓய்வு எடுக்கும்படி அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. அவரை சந்திக்க பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தத்தின் அடிப்படையில் அவர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் நேற்று மாலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளன. அவற்றின் அடிப்படையிலும், இன்று (நேற்று) இரவில் அவரது ரத்த அழுத்த நிலவரத்தின் அடிப்படையிலும், அவரை ‘டிஸ்சார்ஜ்’ செய்வது குறித்து நாளை (இன்று) காலையில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது எப்போது என்பது குறித்து பிற்பகலில் முடிவு செய்யப்படும் என்றும், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து பயப்பட வேண்டியது இல்லை என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்பத்திரியில் இருந்து சசிகலா ‘டிஸ்சார்ஜ்’ ஆனார்; பெங்களூரு சொகுசு விடுதியில் ஒரு வாரம் ஓய்வு
கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்ததை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து சசிகலா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பெங்களூரு அருகே ஒரு வாரம் சொகுசு விடுதியில் அவர் ஓய்வெடுக்க உள்ளார்.
2. ரஜினிகாந்த் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன் வேண்டுகோள்
ரஜினிகாந்த் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
4. ஆண்டவன் கொடுத்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்த முடியாது.. மனம் திறந்த ரஜினிகாந்த்...அகில இந்திய அளவில் டிரெண்டிங்
தான் அரசியல் கட்சியை தொடங்கப் போவதில்லை என்றும், ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் என்றும், மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இவரது திடீர் அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
5. 31-ம் தேதி ரஜினிகாந்தின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவதில் எந்த சந்தேகமும் இல்லை - ரஜினி தரப்பு
31-ம் தேதி ரஜினிகாந்தின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவதில் எந்த சந்தேகமும் இல்லை என ரஜினி தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.