மாநில செய்திகள்

ஆயிரம் விளக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மோடி கையில் சமர்ப்பிப்பேன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு பேட்டி + "||" + Modi with huge success in a thousand lights Interview with actress Khushbu who has been announced as the candidate to submit hand in hand

ஆயிரம் விளக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மோடி கையில் சமர்ப்பிப்பேன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு பேட்டி

ஆயிரம் விளக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மோடி கையில் சமர்ப்பிப்பேன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு பேட்டி
ஆயிரம் விளக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிரதமர் மோடி கைகளில் சமர்ப்பிப்பேன் என்று அந்த தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு கூறி உள்ளார்.
சென்னை, 

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள பா.ஜனதா தேர்தல் அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்த பா.ஜனதா டெல்லி தலைமை மற்றும் தமிழக தலைமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக இந்த தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்று, அதனை பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து இந்த வெற்றியை அவர்களது கைகளில் சமர்ப்பிப்பேன்.

அதே நேரத்தில், மாநில தலைவர் எல்.முருகனின் உதவியும் பெரிய அளவில் இருந்தது. அவருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ஜனதாவை நம்பி தான்...

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ‘வாஷிங்மிஷின்' உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்துள்ளார்கள். மக்களின் எதிர்பார்ப்பு தான் முக்கியம்.

ஏழை மக்களுக்கு நல்லது செய்வதில் எந்த தவறும் கிடையாது. அதற்காகத்தான் அரசாங்கம் இருக்கிறது.

நான் பா.ஜனதாவை நம்பித்தான் களம் இறங்கி இருக்கிறேன். என்னுடைய முகமதிப்பு பா.ஜனதாவுக்கு உதவினால் மகிழ்ச்சி அடைவேன். நிச்சயமாக பொதுமக்கள் வாக்களிக்கும் போது, எனது முகம் மட்டும் அல்ல அதற்கு பின்னால் தாமரையும் இருக்கும் அதைப் பார்த்து தான் மக்கள் வாக்களிப்பார்கள். நாளை (இன்று) முதல் ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.

எங்களிடம் குடும்ப அரசியல் இல்லை

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் 2 கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளது.

தி.மு.க..தலைவர் காங்கிரசை பார்த்து கட்சி தலைவர்களின் மகன்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூற முடியாது. காரணம் அவர் (மு.க.ஸ்டாலின்) மகனையும் அரசியலில் இறக்கி விட்டு உள்ளார். எனக்கு பின்னால் கட்சியும், கட்சி தொண்டர்களும் இருக்கிறார்களே தவிர எனக்கு பின்னால் என் குடும்ப உறுப்பினர்கள் இல்லை. தேர்தலுக்கு எனது சொந்த பணத்தை செலவு செய்வேன். எனக்கு பின்னால் என் கணவர் இருக்கிறார் அவரும் முன்னால் வரப்போவது இல்லை. எங்களிடம் குடும்ப அரசியல் இல்லை.

வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உத்தேசித்து உள்ளேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள மக்களிடம், பா.ஜனதாவுக்கு வாக்களித்தால் உங்கள் வாழ்வு நலமாகும் என்று கூறி வாக்கு சேகரிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குஷ்பு தயாரித்த பேய் படத்துக்கு ‘யு ஏ' சான்றிதழ்
நடிகை குஷ்பு அரண்மனை 3 என்ற பேய் படத்தை தயாரித்து உள்ளார். இது ஏற்கனவே வெளியாகி வசூல் குவித்த அரண்மனை படத்தின் 3-ம் பாகமாக தயாராகி உள்ளது.
2. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஜி.கே.வாசன் பேட்டி
உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஜி.கே.வாசன் பேட்டி.
3. கட்சி மாறுவதாக விமர்சனம் நடிகை குஷ்பு கோபம்
நடிகை குஷ்பு ஏற்கனவே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பணியாற்றிவிட்டு இப்போது பா.ஜனதா கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார்.
4. மின்சாரத்துறையில் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லை முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
‘மடியில் கனமில்லை, அதனால் எதற்கும் பயமில்லை’ என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தவறும் மின்சாரத்துறையில் நடைபெறவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
5. லண்டன் டெஸ்டில் அபார வெற்றி: இங்கிலாந்து வீரர்களின் சீண்டல்கள் கூடுதல் உத்வேகம் தந்தது இந்திய கேப்டன் கோலி பேட்டி
லண்டன் டெஸ்டில் இங்கிலாந்து வீரர்களின் சீண்டல்கள் எங்களின் வெற்றி வேட்கைக்கு கூடுதல் உத்வேகத்தை தந்தது என்று இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.