மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை + "||" + Is the suicide of the counterfeit collector's interview clerk due to the workload? Police are conducting a serious investigation

கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி கேசவலு நகரை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 47). இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி லலிதா (45), மகன் அருளானந்தம் (17).

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் அருளானந்தம் பிளஸ்-2 படித்து வருகிறார். இதனால் லலிதா சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து மகனுடன் வசித்து வருகிறார்.

கள்ளக்குறிச்சியில் தனியாக வசித்து வந்த சிவபாலன் அவ்வப்போது சென்னைக்கு சென்று மனைவி மற்றும் மகனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் சிவபாலன் அதே தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் பூபதி(30) என்பவரிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று காலை 9 மணியளவில் பூபதி, சிவபாலனின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சிவபாலனின் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு மூடி இருந்தது.

பின்னர் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சிவபாலன் வேட்டியால் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூபதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவபாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கலெக்டர் கேட்டறிந்தார்

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கிரண்குராலா மருத்துவமனைக்கு சென்று சிவபாலன் உடலை பார்த்து அவரது தற்கொலை சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் சிவபாலன் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது மனைவி, மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். கணவனின் உடலை பார்த்து மனைவியும், தந்தையின் உடலை பார்த்து மகனும் கதறி அழுதனர்.

போலீசார் தீவிர விசாரணை

பின்னர் பூபதி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு சிவபாலனின் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சிமெண்ட் விலையேற்றம்: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2. உளவு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான விசாரணையை தொடங்க வேண்டும் - மம்தா பானர்ஜி
பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
3. மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அரசின் நிலையை தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம்
மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த தன் நிலையை தெரிவிக்க மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி விசாரணையை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.
4. அ.தி.மு.க. ஆட்சியில் தரமற்ற முகக்கவசம் பற்றி விசாரணை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
அ.தி.மு.க. ஆட்சியில் தரமற்ற முகக்கவசம் வழங்கியது பற்றி விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.
5. கொரோனா வைரஸ் குறித்த விசாரணையை சீனா நிராகரிப்பது பொறுப்பற்றது - அமெரிக்கா கருத்து
கொரோனா வைரசின் தோற்றம் குறித்த 2-ம் கட்ட விசாரணையை சீனா நிராகரிப்பது பொறுப்பற்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.