ராணிப்பேட்டை கலெக்டருக்கு கொரோனா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி.
ராணிப்பேட்டை,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
முன்னதாக அவர் கடந்த மாதம் கொரோனா தொற்று தடுப்பூசி போட்டிருந்தார். இந்த நிலையில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜுக்கு நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல், சளி அறிகுறி இருந்தது. அதனால் அவர் நேற்று வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளனர்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட்டு, தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.