ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுவார்; கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பலராமனின் 75-வது பிறந்த நாள் விழா நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுவார்; கே.எஸ்.அழகிரி பேட்டி
Published on

வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் அங்கு காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுவார்.தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும் என்று செய்தி வருகிறது. அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அ.தி. மு.க. பணம் பலம் இங்கு எடுபடவில்லை.

தேர்தல் முடிந்த அடுத்த நாளே உர விலை அதிரிக்கப்பட்டு இருப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். இதை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா? இதற்கு ஒரு முழம் கயிறை கொடுத்து விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ள கூறியிருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com