கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் தபால் ஓட்டு பதிவில் முறைகேடு - தி.மு.க. புகார்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் தபால் ஓட்டு பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் ஆஸ்டின் போட்டியிட்டார். அந்த தொகுதியில் தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. ஆனால் அதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவருகிறது.

இதுபோன்ற முறைகேடுகளில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com