மாநில செய்திகள்

அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும் -மு.க.ஸ்டாலின் + "||" + DMK will definitely do its duty to the people of Tamil Nadu on the way to Ambedkar - MK Stalin

அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும் -மு.க.ஸ்டாலின்

அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும்  -மு.க.ஸ்டாலின்
அம்பேத்கர் வழியில் திமுக தன் கடமையை நிறைவேற்றும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை

சட்டமேதை என அழைக்கப்படும் அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். சடட் வல்லுநராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக தன்னை நிரூபித்தார். 1990-ல் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

அம்பேத்கரின் 130-வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இயக்கங்களும் அம்பேத்கர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பலரும் அம்பேத்கரின் சமூக பங்களிப்பை நினைவூட்டி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

அம்பேத்கருக்கு திமுக சார்பில் எங்களின் வீரவணக்கத்தை செலுத்தியிருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மாபெரும் தலைவர். அவருடைய வழிநின்று, திமுக தன் கடமையை உறுதியாக, நிச்சயமாக நிறைவேற்றும்  என தெரிவித்தார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-தொடர்புடைய செய்திகள்

1. அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்-மு.க.ஸ்டாலின்
அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் இருவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
2. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து
தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
3. தமிழக சட்டசபை தேர்தல்: இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்
தமிழக சட்டசபை தேர்தலில் இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம் வருமாறு
4. திருநங்கையர் /திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும் - மு.க.ஸ்டாலின்
திருநங்கையர் தினத்தை முன்னிட்டு திருநங்கையர் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை பரிசோதனையில் உறுதி
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.