மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து: முன்ஜாமீன் கோரும் நடிகர் மன்சூர் அலிகான் + "||" + Comment on the corona vaccine: Mansour Alikhan, the actor seeking pre-bail

கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து: முன்ஜாமீன் கோரும் நடிகர் மன்சூர் அலிகான்

கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து: முன்ஜாமீன் கோரும் நடிகர் மன்சூர் அலிகான்
கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை, 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கில் கைது செய்வதில் இருந்து விலக்கு பெற முன்ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பற்றி உள்நோக்கத்துடன் கருத்து கூறவில்லை என்றும், தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேன் என்றும் மன்சூர் அலிகான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சிக்கு 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்
திருச்சிக்கு 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
2. ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
செங்கோட்டையில் ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3. “கொரோனா தடுப்பூசிக்கான நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கொரோனா தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
4. டெல்லியில் கொரோனா தடுப்பூசிகளுக்கு இப்போதும் தட்டுப்பாடு உள்ளது: கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா தடுப்பூசிகளுக்கு இப்போதும் தட்டுப்பாடு உள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
5. 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
பொள்ளாச்சி வருவாய் கோட்ட பகுதியில் இதுவரைக்கும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.