மாநில செய்திகள்

ஐதராபாத்தில் நடந்தது நடிகர் விஷ்ணு விஷால் காதல் திருமணம் பேட்மிண்டன் வீராங்கனையை மணந்தார் + "||" + What happened in Hyderabad was the romantic marriage of actor Vishnu Vishal to a badminton player

ஐதராபாத்தில் நடந்தது நடிகர் விஷ்ணு விஷால் காதல் திருமணம் பேட்மிண்டன் வீராங்கனையை மணந்தார்

ஐதராபாத்தில் நடந்தது நடிகர் விஷ்ணு விஷால் காதல் திருமணம் பேட்மிண்டன் வீராங்கனையை மணந்தார்
நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்தது.
சென்னை, 

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகன் ஆவார். இவர், பழம்பெரும் நடிகர் கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதல் திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.

அதைத்தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக வெளியே சுற்றினார்கள். இவர்கள் இரண்டு பேரையும் திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர்கள், உறவினர்கள் கேட்டு கொண்டார்கள்.

திருமணம்

அதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால்- ஜூவாலா கட்டா ஆகிய இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டார்கள். ஐதாராபாத்தில் நேற்று மாலை 4 மணியளவில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணை கடத்திச்சென்று திருமணம்: மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் கைது
பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்ய முயற்சி செய்ததாக, மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
2. ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி சினிமா துணை நடிகர் கைது
ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி சினிமா துணை நடிகர் கைது.
3. நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்.
4. நடிகர்-ஒளிப்பதிவாளர் அருண்மொழிவர்மன் திடீர் மரணம்
மறைந்த பழம் பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகன் அருண்மொழி வர்மன். இவர் பிரபல நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி ஆகியோரின் சகோதரர் ஆவார்.
5. வலைத்தள போலி கணக்கு ரசிகர்களை எச்சரித்த நடிகர் யோகிபாபு
சமூக வலைத்தளத்தில் நடிகர்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி செய்யும் போக்கு தொடர்கிறது.