மாநில செய்திகள்

மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து + "||" + MK Stalin's Greetings to Mamta Banerjee, Binarayi Vijayan

மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
சென்னை, 

கேரளாவில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள பினராயி விஜயன், மேற்கு வங்காளத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜிக்கு, டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து செய்தியில், ‘‘மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களை (மம்தா பானர்ஜி) வாழ்த்துகிறேன். கொரோனா பரவல் உள்ள இந்த சூழலில், மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, உங்களுடைய மாநிலத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்வீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மீண்டும் ஒரு வெற்றிக்கரமான ஆட்சிக்காலம் அமைய தி.மு.க. சார்பில் வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதேபோல பினராயி விஜயனுக்கு, மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் அனுப்பிய வாழ்த்து செய்தியில், ‘‘கேரள மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உங்களுக்கு (பினராயி விஜயன்) வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவரது அளவிடப்பட்ட மற்றும் தீர்க்கமான தலைமை கேரளா உயர்ந்த இடத்தை அடைய உதவுவதில் கருவியாக உள்ளது. மேலும் அவருடைய பதவி மீண்டும் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துகிறேன்’’ என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து ‘‘பேரிடரில் இருந்து மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்’’
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், பேரிடரில் இருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும் என்று கூறியுள்ளார்.
2. சீமானின் தந்தை மரணம் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை யா.செந்தமிழன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
3. கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம்: ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் இருப்பை மேலும் அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மு.க.ஸ்டாலின் தகவல்
ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் இருப்பை மேலும் அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
4. “மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்” உலகத் தமிழர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மக்களின் உயிர்காக்கஉதவிக்கரம் நீட்டுங்கள் என்று உலகத் தமிழர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. கடலூரில் அமோனியா பாய்லர் வெடித்து 4 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி மு.க.ஸ்டாலின் உத்தரவு
கடலூரில் அமோனியா பாய்லர் வெடித்து 4 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.