மாநில செய்திகள்

தமிழக முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு + "||" + PM Narendra Modi spoke to Tamil Nadu CM MK Stalin on the COVID-related situation in the state

தமிழக முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு

தமிழக முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு
கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். 

இந்த சூழலில், தமிழக முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது, கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தகவல்கள் கூறுகின்றன. 

முன்னதாக, மராட்டியம், இமாசல பிரதேசம், மத்திய பிரதேச மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி, கொரோனா விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாரிசில் நடைபெறும் ‘விவாடெக்’ டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை
விவாடெக் என்பது 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸ் நகரத்தில் நடைபெறும் ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் மற்றும் புதுமை நிறுவனங்களின் நிகழ்ச்சியாகும்.
2. முதல்- அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் - 17 ந்தேதி பிரதமருடன் சந்திப்பு
3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் முழு விவரம்
3. இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள பென்னட்டிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நஃப்தலி பென்னட்டிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. கொரோனா 2-வது அலையின் போது உதவியதற்காக ஜி 7 நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி
ஜி - 7 அமைப்பின் மாநாடு ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
5. மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி பிரதமரின் அறிவிப்பு தடுப்பூசி தட்டுப்பாடு நீங்குமா...?
தடுப்பூசி கொள்கையில் மத்திய அரசு மாற்றம் செய்து உள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் நீங்கும்.