கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம் - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை


கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம் - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 May 2021 12:16 PM GMT (Updated: 18 May 2021 12:16 PM GMT)

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவதால்தான் பாதிப்பு அதிகமாகிறது. எனவே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் இருப்பவர்கள் வெளியே வரக்கூடாது.

அவ்வாறு தனிமையில் உள்ளவர்கள் அல்லது அவரது வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சுற்றினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை வெளியே சுற்றினால் கொரோனா சிகிச்சை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

அதேநேரத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான பொருள்கள் கிடைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்யும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் 044 253844520 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அண்டை வீட்டார்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story