கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் - அரசாணை வெளீயிடு


கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் - அரசாணை வெளீயிடு
x
தினத்தந்தி 20 May 2021 1:31 PM GMT (Updated: 20 May 2021 1:31 PM GMT)

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளீயிட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் 6 மாதத்திற்கு பணியில் இருப்பார்கள்.

தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொகுப்பூதியமாக தலா ரூ. 60,000 வழங்கப்படும். ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story