மாநில செய்திகள்

ஜூன் 01: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு + "||" + June 01: Petrol and diesel prices go up in Chennai today

ஜூன் 01: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

ஜூன் 01: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 95.99 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்தது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. 

இதனால் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்த சூழலில் சென்னையில் நேற்று பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ.95.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.89.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து 95.99 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புனேவில் இருந்து 4 லட்சத்து 80 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
2. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபா
செங்கல்பட்டு மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபா அழைத்து வரப்பட்டுள்ளார்.
3. எரிபொருள் விலை உயர்வு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
கடந்த 46 நாட்களில் 26-வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
4. புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 4 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும்: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும், ஏழை குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

அதிகம் வாசிக்கப்பட்டவை