மாநில செய்திகள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு + "||" + High court orders Centre to respond on case against New Information Technology Rules

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்துவந்தது. இந்த நிலையில் பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை(2021) கொண்டு வந்தது.

இதற்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க வேண்டும் என மே 25 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த விதிகளுக்கு கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், டுவிட்டர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. 

இந்த விதிகளை பொறுத்தவரை குடிமக்களின் தனி உரிமையை நிலைநாட்டுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், சட்ட ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

மத்திய அரசு கொண்டுவந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தன் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரத்தை மத்திய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்யக் காரணமாக அமைந்துள்ளது எனவும், தனி உரிமையையும், கருத்துரிமையையும் பாதிக்கும் வகையில் அவை அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

டி.எம்.கிருஷ்ணாவின் இந்த மனுவை இன்று தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது
2. கொரோனா சர்ச்சை பேச்சு பெண் டைரக்டர் மீது வழக்கு
பிரபல மலையாள பெண் டைரக்டர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது, லட்சத்தீவில் இதுவரை கோரொனா தொற்று இல்லாமல் இருந்தது என்றும், தற்போது அங்கு கொரோனாவை மத்திய அரசு பரப்பி உள்ளது என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
3. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை இடையூறு செய்யக்கூடாது: கூட்டுறவு சங்கங்களை கலைப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
கூட்டுறவு சங்கங்களை கலைப்பதை எதிர்த்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தொடர்ந்து பணியாற்ற இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
4. நன்னிலம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு:எலிமருந்தை தின்று பெண் தற்கொலை முயற்சிவாலிபர் கைது; 3 பேர் மீது வழக்கு
நன்னிலம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் எலிமருந்தை தின்று பெண் தற்கொலைக்கு முயன்றார். இதற்கு காரணமான வாலிபரை போலீசார் கைது செய்து, மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
5. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு: நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் நடிகை சாந்தினியிடம் மாஜிஸ்ரேட்டு மூலம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கருக்கலைப்பு செய்த டாக்டரிடமும் விசாரணை நடக்கிறது.