விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் இலவச மடிக்கணினி மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்


விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் இலவச மடிக்கணினி மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2021 9:03 PM GMT (Updated: 24 Jun 2021 9:03 PM GMT)

விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தெரிவித்துள்ளது.

மதுரை,

அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச மடிக்கணினிகளை வழங்கியது. கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் 2018-2019-ம் ஆண்டு முதல் 2020-2021-ம் கல்வி ஆண்டுகளில் படித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.

ஆனால் 2017-2018- ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவது குறித்து உத்தரவிடப்படவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் கொரோனா காலத்தில் இணையதளம் மூலம் படிப்பதற்கும், தேர்வு எழுதவும் சிரமப்படுகின்றனர். எனவே கடந்த 2017-2018-ம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

விரைவில் வழங்கப்படும்

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “விடுபட்டுள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்” என்றார்.

பின்னர், “அரசின் கொள்கை ரீதியான முடிவில் கோர்ட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. இருந்தாலும், மாணவர்களின் படிப்பிற்கு மடிக்கணினி அவசியமான ஒன்று. விடுப்பட்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story