கடும் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ ஆய்வு கூடத்தை அமைப்பதா? சீமான் கண்டனம்


கடும் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ ஆய்வு கூடத்தை அமைப்பதா? சீமான் கண்டனம்
x
தினத்தந்தி 2 July 2021 11:23 PM GMT (Updated: 2 July 2021 11:23 PM GMT)

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் நாசகாரத் திட்டமான நியூட்ரினோ ஆய்வு திட்டம் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதனைச் செயல்படுத்த முனைகிற கொடுஞ்செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். நியூட்ரினோ ஆய்வு கூடத்தை அமைக்க முனைவது வன்மையான 
கண்டனத்திற்குரியது. கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்தினை எதிர்த்து வருகிறோம்.

கடந்த மே 20-ந் தேதியன்று நியூட்ரினோ திட்டத்துக்கு காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழக வனத்துறையிடம் டாடா ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதனை தமிழக வனத்துறை உடனடியாக நிராகரிக்க வேண்டும். இத்தோடு, நியூட்ரினோ திட்டம் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்கிலும் முனைப்போடு செயல்பட்டு, இத்திட்டத்தினைச் செயல்படுத்த 
முனையும் மத்திய அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டுமெனக் கோருகிறேன். இந்த திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து, இத்திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Next Story