மாநில செய்திகள்

கேரளா, மராட்டியம் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு + "||" + No need for corona certificate to go to Kerala, Marathi Chennai Airport officials notice

கேரளா, மராட்டியம் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு

கேரளா, மராட்டியம் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு
2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழுடன் வந்தால் கேரளா, மராட்டியத்துக்கு விமானத்தில் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை என சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூா் மற்றும் மராட்டிய மாநிலம் மும்பை, புனே, அவுரங்காபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்களில் பயணிப்பவா்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன்தான் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே அமலில் உள்ளது.


தற்போது இந்த கட்டுப்பாட்டில் தளா்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழ்களுடன் சென்னையில் இருந்து கேரளா, மராட்டிய மாநிலங்களுக்கு விமானத்தில் பயணிக்கலாம். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர தேவை இல்லை.

தடுப்பூசி போடாதவர்கள்...

ஆனால் 2 டோஸ் தடுப்பூசி போடாதவா்கள், தாங்கள் விமான பயணம் செய்யும் நேரத்தில் இருந்து 72 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடனேயே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்து உள்ளனா்.

இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் உத்தரவுபடி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்திகள்

1. 3-வது அலையை தடுக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் விழிப்புணர்வு பேரணி கலெக்டர்கள் கூட்டத்தில் இறையன்பு அறிவிப்பு
கொரோனா 3-வது அலையை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. மாவட்டந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் நினைவாக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்தார்.
2. தமிழகத்தில் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் 12 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
3. மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் தற்காலிக நீக்கம் துரைமுருகன் அறிவிப்பு
மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் தற்காலிக நீக்கம் துரைமுருகன் அறிவிப்பு.
4. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெற்ற பின்பும் ஆதரவு வழங்குவோம்; அமெரிக்கா அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெற்ற பின்பும் ஆதரவு வழங்குவோம் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
5. புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை
புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை.