மாநில செய்திகள்

பாரம்பரிய கலைகளை உலகுக்கு எடுத்துசெல்லும் விதமாக இசை, நடனம், களரியை ஆன்லைன் மூலம் சொல்லி கொடுக்கும் வசதி + "||" + Facility to teach music, dance and gallery online in a way that takes the traditional arts to the world

பாரம்பரிய கலைகளை உலகுக்கு எடுத்துசெல்லும் விதமாக இசை, நடனம், களரியை ஆன்லைன் மூலம் சொல்லி கொடுக்கும் வசதி

பாரம்பரிய கலைகளை உலகுக்கு எடுத்துசெல்லும் விதமாக இசை, நடனம், களரியை ஆன்லைன் மூலம் சொல்லி கொடுக்கும் வசதி
பாரம்பரிய கலைகளை உலகுக்கு எடுத்துசெல்லும் விதமாக இசை, நடனம், களரியை ஆன்லைன் மூலம் சொல்லி கொடுக்கும் வசதி ஜக்கிவாசுதேவ் தகவல்.
சென்னை,

குரு பவுர்ணமியை முன்னிட்டு ஜக்கிவாசுதேவின் சிறப்பு சத்சங்கம் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் ஜக்கிவாசுதேவ் பேசியதாவது:-

மனிதர்கள் மற்ற உயிரினங்களை போல் உணவு, தூக்கம், காமம் போன்ற வெறும் பிழைப்பு சார்ந்த அம்சங்களில் மட்டும் சிக்கி வாழ்வை வீணடித்துவிட கூடாது. பிழைப்பை தாண்டிய பரிமாணங்களை அவர்கள் அனுபவித்து உணரவேண்டும். இசை, நடனம் போன்றவற்றின் மூலமும் இந்த நிலையை நாம் அடைய முடியும். ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் பிழைப்பை தாண்டிய கலைகளை கற்று தேர்ந்திருக்கிறார்கள். சிறுவயதில் இருந்தே இசை, நடனம், களரி போன்றவற்றில் தங்கள் வாழ்வை முதலீடு செய்துள்ளார்கள். 24 மணிநேரமும் இந்த கலைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்கள்.


அவர்கள் தாங்கள் கற்ற கலைகளை இப்போது மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க தயாராகிவிட்டார்கள். அதற்காக புராஜக்ட் சம்ஸ்கிரிதி என்ற திட்டம் இந்த குரு பவுர்ணமி நாளில் தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் சில வாரங்களில் ஆன்லைன் வழியாக இசை, நடனம், களரி போன்றவற்றை சொல்லிக்கொடுக்கும் செயல்களை தொடங்க உள்ளார்கள். பின்னர், உலகின் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் நம் இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்
எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்.
2. மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
சென்னை மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
3. பன்முக திறமை கொண்ட பாரதியார் பெயரில் அருங்காட்சியகம் மத்திய மந்திரி தகவல்
பன்முக திறமை கொண்ட பாரதியாருக்கு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால் சென்னையில் கூறினார்.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு நாளை கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
5. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.