மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 July 2021 10:06 PM GMT (Updated: 31 July 2021 10:06 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் 6 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுள்ள பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு பாசனத்திற்காக 1-8-2021 (இன்று) முதல் 15-12-2021 வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதேபோல், மேட்டூர் அணையின் கிழக்குக்கரை கால்வாய் பாசனப் பகுதிகளில் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் மேற்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையில் இருந்து 1-8-2021 (இன்று) முதல் 15-12-2021 வரை தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story