மாநில செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி வெகுமதி + "||" + Tokyo Olympics: Gold medalist Neeraj Chopra gets Rs 2 crore reward

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி வெகுமதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி வெகுமதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, பைஜூஸ் நிறுவனம் ரூ.2 கோடி வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.
சென்னை,

ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்களான நீரஜ் சோப்ரா, மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா, லவ்லினா, போர்கோஹெய்ன், பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா ஆகியோர் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்து இருக்கின்றனர்.


அவர்களை கவுரவிக்கும் விதமாக அந்தந்த மாநில அரசுகள் ஊக்கப்பரிசுகளை அறிவித்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இந்த 7 விளையாட்டு வீரர்களின் சாதனைகளை போற்றும் வகையில் பைஜூஸ் நிறுவனமும் ஊக்கத்தொகையை அறிவித்து இருக்கிறது.

அதன்படி, தடகளத்தில் இந்திய வரலாற்றில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடியும், மற்ற விளையாட்டு வீரர்களான மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா, லவ்லினா, போர்கோஹெய்ன், பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியும் வழங்குகிறது.

பைஜூஸ் நிறுவனம்

இதுகுறித்து பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பைஜூ ரவீந்திரன் கூறியதாவது:-

தேசத்தை கட்டமைப்பதில் விளையாட்டுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒலிம்பிக் கதாநாயகர்களை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டிய நேரம் இது. அவர்கள் பெறும் பாராட்டுகளுக்கு தகுதியானவர்கள்.

டோக்கியோ 2020-ல் இந்த வரலாற்று சாதனைக்கு பிறகு வீரர்களின் முயற்சிகள், தியாகங்கள் மற்றும் சாதனைகளுக்கு நாங்கள் வெகுமதி அளிக்கிறோம். இந்த சிறிய செயல் அவர்களின் பயணத்தில், நாட்டிற்கு அதிக விருதுகளை வெல்ல மேலும் பல இளைஞர்களை, பெரிய கனவு காண ஊக்குவிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்.
2. ஆமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டியா? இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
2036 -ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சி செய்துவருகிறது.
3. பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை
பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
4. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு சர்ப்ராஸ் அகமது இடம்பெறவில்லை
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு இடம் கிடைக்கவில்லை.