கொடநாடு விவகாரம்: மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்- மு.க.ஸ்டாலின்


கொடநாடு விவகாரம்: மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்- மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 18 Aug 2021 5:56 AM GMT (Updated: 18 Aug 2021 5:56 AM GMT)

கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கிற்கு வெளியே தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை

சட்டமன்றத்தில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்  மீதான மூன்றாம் நாள் விவாதம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.   சபாநாயகர் அனுமதி அளித்ததும் அவர் பேச தொடங்கினார்.

கொடநாடு விவகாரத்தை தற்போது மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து  அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம்' என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கிற்கு வெளியே தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொடநாடு கொலை வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என சட்டசபையில் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அ.தி.மு.க. வினர் செயல்படுகின்றனர். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். கொடநாடு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை.

"கொடநாடு கொலை வழக்கில் அரசியல் ரீதியாக எந்த தலையீடும் இல்லை. தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. நீதிமன்றத்தில் அனுமதியுடன் தான் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறினார்.

Next Story