மாநில செய்திகள்

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் கவர்னருடன் சந்திப்பு + "||" + Meeting with the Governor General of the Indian Coast Guard

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் கவர்னருடன் சந்திப்பு

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் கவர்னருடன் சந்திப்பு
இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் கவர்னருடன் சந்திப்பு.
சென்னை,

இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் கே.நடராஜன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அப்போது அவர், இந்திய கடலோர காவல்படையின் பல்வேறு செயல்பாடுகள், சமீபத்திய சாதனைகள் குறித்து கவர்னரிடம் எடுத்து கூறினார். கடலோர பாதுகாப்பில் சமீபகாலமாக இருந்துவரும் சவால்கள் குறித்தும், இந்திய எல்லையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார். கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும் கூறினார்.


மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டுவரும் இந்திய கடலோர காவல்படையின் செயல்பாடுகளுக்கு கவர்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
2. இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக கவர்னர்!
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளார்.
3. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்ட; ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி சந்திப்பு
‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்ட; ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி சந்திப்பு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.
4. தமிழக கவர்னருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
தமிழக கவர்னரை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார்.
5. சோனியாகாந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!
கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக சோனியாகாந்தியை சந்தித்ததாக, சித்தராமையா தெரிவித்தார்.