மாநில செய்திகள்

இளம்பெண்ணிடம் சில்மிஷம்; போலீஸ் ஏட்டு கைது + "||" + To the young lady Sexual harassment |; Police record arrest

இளம்பெண்ணிடம் சில்மிஷம்; போலீஸ் ஏட்டு கைது

இளம்பெண்ணிடம் சில்மிஷம்; போலீஸ் ஏட்டு கைது
இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,

சென்னை போரூர் போக்குவரத்து பிரிவில் ஏட்டுவாக பணிபுரிந்து வருபவர் குமரன் (வயது 50). இவர், போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார்.


அப்போது அங்கு 2 இளம்பெண்கள் வந்தனர். போலீஸ் ஏட்டு குமரன், அவர்களில் ஒரு இளம்பெண்ணின் தோள் மீது கையை வைத்து சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கூச்சலிட்டார்.

போலீஸ் ஏட்டு கைது

இதுபற்றி அங்கிருந்தவர்கள், போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், போரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து போலீஸ் ஏட்டு குமரன் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்குவரத்து போலீஸ் ஏட்டுவால் சில்மிஷத்துக்கு ஆளான இளம்பெண்ணுடன் அவருடைய தோழி ஒருவர் இருந்தார். அவர், உதவி கமிஷனர் ஒருவரின் மகள் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது
கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது - சைபர் கிரைம் போலீசாருடன் தொண்டர்கள் வாக்குவாதம்.
2. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை இழந்தவர் கண்ணீர் புகார் மோசடி நபர் அதிரடி கைது
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை இழந்த நபர் கண்ணீருடன் கொடுத்த புகார் அடிப்படையில் மோசடி நபர் கைது செய்யப்பட்டார்.
3. பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது
சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி, 12 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. கவனத்தை திசை திருப்பி வயதானவர்களிடம் பணம்-நகை பறிப்பு
சென்னையில் வயதானவர்களிடம் பணம், நகை பறிக்கும் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
5. வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மோசடி: 2 பேர் கைது
சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம்களில் பொருட்களை தவணை முறையில் வாங்க, வாடிக்கையாளர்களுக்கு தனியார் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி கொடுத்து வருகிறது.