தமிழகத்தில் 1,693 பேருக்கு கொரோனா: 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு


தமிழகத்தில் 1,693 பேருக்கு கொரோனா: 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Sep 2021 11:10 PM GMT (Updated: 16 Sep 2021 11:10 PM GMT)

தமிழகத்தில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 936 ஆண்கள், 757 பெண்கள் என மொத்தம் 1,693 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 202 பேரும், கோவையில் 206 பேரும், ஈரோட்டில் 134 பேரும், செங்கல்பட்டில் 135 பேரும், திருப்பூரில் 110 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்சமாக விருதுநகர், திருப்பத்தூரில் தலா 7 பேரும், தேனி, பெரம்பலூரில் தலா 6 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 87 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 271 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தஞ்சாவூர், திருப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு உள்பட 24 மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்துள்ளது. சென்னை, கோவை உள்பட 14 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்துள்ளது.

25 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15 லட்சத்து 41 ஆயிரத்து 394 ஆண்களும், 10 லட்சத்து 98 ஆயிரத்து 929 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 26 லட்சத்து 40 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 98 ஆயிரத்து 327 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரத்து 921 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 17 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 8 பேரும் என 25 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டு, சேலத்தில் தலா 3 பேரும், திருவண்ணாமலையில் 2 பேரும் உள்பட 17 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 21 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 ஆயிரத்து 271 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

1,548 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நேற்று 40 ஆயிரத்து 907 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 140 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 167 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 73 ஆயிரத்து 214 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,548 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 173 பேரும், கோவையில் 206 பேரும், திருப்பூரில் 109 பேரும், ஈரோட்டில் 96 பேரும் அடங்குவர். இதுவரையில் 25 லட்சத்து 88 ஆயிரத்து 334 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 756 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story