மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் - அரசு அதிகாரிகள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Seperate Education Board for Puducherry High Court orders govt officials to take decision

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் - அரசு அதிகாரிகள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் - அரசு அதிகாரிகள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக புதுச்சேரி அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
 
புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியமும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தனி பாடத்திட்டமும் வகுக்க வேண்டும் எனக் கோரி ஸ்ரீதர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, புதுச்சேரியில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

எனினும் இது தொடர்பாக புதுச்சேரி அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை செயலாளருக்கு 4 வாரங்களில் புதிய கோரிக்கை மனுவை அளிக்க வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்டனர். மேலும் தனிப்பட்ட பாட திட்டம் வழங்குவதின் தேவை பரிசீலித்து, 12 வாரங்களில் தகுந்த முடிவை மனுதாரருக்கு கல்வித்துறை செயலாளர் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 454 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 461 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. “புதுச்சேரியில் விரைவில் 100% தடுப்பூசி செலுத்தப்படும்” - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
புதுச்சேரி விரைவில் 100% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4. புதுச்சேரியில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 490 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. புதுச்சேரியில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 637 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.