மாநில செய்திகள்

திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது; எடப்பாடி பழனிசாமி பேட்டி + "||" + TN assembly election may be held on 2024? EPS

திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது; எடப்பாடி பழனிசாமி பேட்டி

திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது; எடப்பாடி பழனிசாமி பேட்டி
2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுடன் நடைபெர வாய்ப்பு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை, 

சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசமி கூறியதாவது:  2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது.

 நீட் தேர்வு விலக்குக்காக அதிமுக கொண்டு வந்த அதே தீர்மானத்தையே திமுகவும் கொண்டு வந்துள்ளது. அதிமுக கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு சிறப்பான திட்டம் என்பதால் திமுக அரசு தொடர்கிறது. 

ஆயிரம் பேர் அமரும் வகையில் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படுவதால் எம்.பிக்கள் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். 

மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம். திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது
நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமானோர் நகையை அடமானம் வைத்துள்ளனர்" என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
2. சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை? - ஜெயக்குமார் கேள்வி
உண்மையான கட்சித் தொண்டர்கள் அதிமுகவை விட்டு வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
3. ‘எம்.ஜி.ஆர். எந்த காலத்திலும், யாருக்கும் துரோகம் செய்தது இல்லை' - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை
எம்.ஜி.ஆர். எந்த காலத்திலும், யாருக்கும் துரோகம் செய்தது இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
4. கொடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு
கொடநாடு விவகாரத்தில், வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்று புலன் விசாரணைக்குழு மீது மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
5. மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல. கணேசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.