மாநில செய்திகள்

கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் தொண்டர்களுக்கு, கமல்ஹாசன் வேண்டுகோள் + "||" + Kamal Haasan appeals to volunteers to attend village council meetings

கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் தொண்டர்களுக்கு, கமல்ஹாசன் வேண்டுகோள்

கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் தொண்டர்களுக்கு, கமல்ஹாசன் வேண்டுகோள்
கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் தொண்டர்களுக்கு, கமல்ஹாசன் வேண்டுகோள்.
சென்னை,

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிராம சபைகளைப் பொறுத்தவரை ‘கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு. கிராம சபைகளின் முக்கியத்துவத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் பணியை மக்கள் நீதி மய்யம் திறம்படச் செய்தது எனும் பெருமை நமக்கு உண்டு.


கிராம சபைகளை கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதை நடத்தாமல் இருப்பதிலும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. கொரோனா பெருந்தொற்று இவர்களுக்கு மிக வசதியான ஒரு காரணமாக அமைந்தது.

மக்கள் நீதி மய்யத்திற்கு இது முதல் உள்ளாட்சித் தேர்தல். நானும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தேர்தல் நடக்காத பகுதிகளில் நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தினர் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அனைத்து விவசாயிகளும் பயிரை காப்பீடு செய்யுங்கள்’ மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் அனைத்து விவசாயிகளும் தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
2. காந்திக்கு பிறகு காலம் நமக்கு தந்த இன்னொரு தேசப்பிதா - அப்துல் கலாமுக்கு, கமல்ஹாசன் புகழ் அஞ்சலி
காந்திக்கு பிறகு காலம் நமக்கு தந்த இன்னொரு தேசப்பிதா - அப்துல் கலாமுக்கு, கமல்ஹாசன் புகழ் அஞ்சலி.
3. வணிக வளாகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள்
பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள், அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. அரசு ஆஸ்பத்திரிகளில் ‘எக்ஸ்ரே’ முடிவுகளை படச்சுருளில் வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
அரசு ஆஸ்பத்திரிகளில் ‘எக்ஸ்ரே’ முடிவுகளை வெள்ளைத்தாளில் வழங்காமல் படச்சுருளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. ‘‘உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்’’ வாக்காளர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைய ‘‘உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்’’ வாக்காளர்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.