மேட்டூர் அணையின் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணையின் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Sep 2021 5:45 AM GMT (Updated: 29 Sep 2021 5:45 AM GMT)

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 9,875 கன அடியில் இருந்து 10,164 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது அங்கு மழைப்பொழிவு குறைந்துள்ளதால், 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது.

இந்நிலையில் அண்மைக் காலமாக டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், பாசத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 73.44 அடியாக உள்ளது. அணையில் தற்போது 35.729 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 9,875 கன அடியில் இருந்து 10,164 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story