மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக சரிவு + "||" + Mettur dam water level drops to 9 thousand cubic feet

மேட்டூர் அணையின் நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10,164 கன அடியில் இருந்து 9,007 கன அடியாக குறைந்துள்ளது.
சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது.

இந்நிலையில் அண்மைக் காலமாக டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், பாசனத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 10,164 கன அடியில் இருந்து 9,007 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று 73.06 அடியாக உள்ளது. அணையில் தற்போது 35.38 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணை நீர்வரத்து 20,500 கன அடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
2. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக குறைவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
3. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடி
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து 30 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
4. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறையத் தொடங்கியது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
5. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்; அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.