மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் + "||" + Chance of rain in 11 districts including Chennai: Meteorological Center

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, 

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதன்படி தஞ்சை, அரியலூர், நாமக்கல், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

மேலும் நாளை (04-10-2021) புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
2. சென்னையில் விட்டு விட்டு பெய்த மழை: தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றும் பணி தொடருகிறது
சென்னையில் நேற்று அவ்வப்போது வெயில் தலைக்காட்டியது. விட்டுவிட்டு மழையும் பெய்தது. சென்னையில் பல இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணி தொடருகிறது.
3. நெல்லை, தென்காசியில் விடிய, விடிய கனமழை: தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவில் தீவு போல் மாறியது.
4. நெல்லை, தென்காசியில் பரவலாக மழை - குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
5. தொடர் மழை: சென்னை வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
சென்னையில் தொடர் மழையால் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.