மாநில செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு குறைப்பு + "||" + Reduction of water opening for delta irrigation from Mettur dam

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சேலம்,

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழையின் காரணமாக, கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அந்த அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.04 அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 75.63 அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 12,308 கன அடியிலிருந்து 12,118 கன அடியாகக் குறைந்ததுள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியிலிருந்து ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 37.74 டி.எம்.சி.யாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 13,500 கன அடியாக உயர்வு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 கன அடியாக உள்ளது.
2. மேட்டூர் அணை நீர்வரத்து 20,500 கன அடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
3. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக குறைவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
4. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடி
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து 30 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
5. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறையத் தொடங்கியது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.