ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்!


வெற்றி பெற்ற பாத்திமா மேரிக்கு அதற்கான சான்றிதழை தேர்தல் பொறுப்பாளர் பழனியப்பன்  வழங்கினார்.
x
வெற்றி பெற்ற பாத்திமா மேரிக்கு அதற்கான சான்றிதழை தேர்தல் பொறுப்பாளர் பழனியப்பன் வழங்கினார்.
தினத்தந்தி 12 Oct 2021 4:35 AM GMT (Updated: 12 Oct 2021 4:35 AM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மாவட்டத்தின் 9 இடங்களில் நடைபெறுகின்றது.

சென்னை

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்), மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டி வருகின்றன.

இதில் 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

மேலும் 1381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 5 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழங்கனாங்குடி முதல்நிலை ஊராட்சி மற்றும் கிழக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணும் பணி நேற்று திருவரம்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் இந்த தேர்தல் பணி ஆணையராக திருவரம்பூர் ஒன்றிய செயல்அலுவலர் பழனியப்பன் தலைமையில் திருவெரும்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோரின் தலைமையில் நேற்று காலை ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகள் அறையானது காலை 8 மணி அளவில் அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டு பெட்டிகளிலிருந்து ஓட்டுகள் கொட்டப்பட்டு எண்ணப்பட்டது.

மேலும் இதனை அடுத்து பழங்கனாங்குடி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் தேர்தலில் சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட பூலாங்குடி காலனி பாரத் நகரை சேர்ந்த மோகன் என்பவர் 54 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்

மேலும் இந்த வார்டில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இங்கு மொத்தம் 98 ஓட்டுகள் பதிவாகி உள்ளது மேலும் செல்லாத ஓட்டு ஓட்டு பதிவாகி உள்ளதாக கூறப்பட்டது.

மேலும் இதே போல் கீழக்குறிச்சி 10வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட அடைக்கல அன்னை நகரை சேர்ந்த பாத்திமா மேரி 189 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

மேலும் இங்கு மொத்தம் பதிவான வாக்குகள் என 263 வாக்குகள் பதிவாகி இருந்தது .

இதில் செல்லாத வாக்காக 3 வாக்குகள் பதிவாகி இருந்ததாக கூறப்பட்டது.

மேலும் இதனை அடுத்து தேர்தல் தலைமைப் பொறுப்பாளராக இருந்த பழனியப்பன் கீழக்குறிச்சி 10 வது வார்டில் வெற்றி பெற்ற பாத்திமா மேரிக்கு வெற்றி பெற்ற சான்றுகளையும் வழங்கினார்.




Next Story