மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் :அதிக இடங்களில் தி.மு.க முன்னிலை + "||" + Rural local body elections: DMK leads in most seats

ஊரக உள்ளாட்சி தேர்தல் :அதிக இடங்களில் தி.மு.க முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தல் :அதிக இடங்களில் தி.மு.க முன்னிலை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி தி.மு.க அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது.
சென்னை:

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்  நடந்தது.

மொத்தம் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் உள்ள 27 ஆயிரம் பதவி இடங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் போட்டியின்றி ஏகமனதாக தேர்வானார்கள். மீதமுதள்ள 23,998 பதவி இடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 79,433 பேர் போட்டியிட்டனர். இதில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பு இல்லாமல் சுயேட்சை சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டனர். அந்த வகையில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள்.

இரண்டு கட்ட தேர்தலில் மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 14,573 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் மொத்தம் 41,500 வாக்கு பெட்டிகளில் இருந்தன.

இவை அனைத்தும் 74 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 31,245 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முதலில் வாக்குப்பெட்டிகளை வாக்கு எண்ணும் அரங்கத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் ஒரு பெரிய பெட்டியில் வாக்குச் சீட்டுகளை கொட்டினர்.

பின்னர் அவற்றை 50-50 கட்டுகளாக கட்டினார்கள். அதன் பிறகு இந்த ஓட்டுச்சீட்டு கட்டுகளை இன்னொரு அறைக்கு கொண்டு சென்று அவற்றை வண்ணம் வாரியாக வாக்குச்சீட்டுகளை தனித்தனியாக பிரித்தனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு கவன்சிலருக்கான பச்சை நிற சீட்டு, ஊராட்சி தலைவருக்கான இளம் சிவப்பு நிற சீட்டு, ஊராட்சி உறுப்பினருக்கான வெள்ளை நிற சீட்டு என தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

அதன் பிறகு இந்த ஓட்டுச்சீட்டுகளை மீண்டும் 50-50 ஆக கட்டினார்கள். இதன் பிறகு ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக எண்ணப்படும் கூட்ட அரங்கத்திற்கு இந்த கட்டுக்கள் அனுப்பப்பட்டன. அங்கு வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் ஓட்டு எண்ணும் பணி நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கான ஓட்டுகளும் ஒரே கட்டிடத்தில் 4 இடங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

140 மாவட்ட கவுன்சிலர் பதவி ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் காலை 10 மணிக்கு மேல் முன்னணி நிலவரங்கள் தெரிய ஆரம்பித்தன.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளிலுமே ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. தான் முன்னிலையில் இருந்தது. தி.மு.க. அனைத்து பதவிகளிலும் 2 இலக்க எண்களில் முன்னிலை பெற்றிருக்க அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒற்றை இலக்க எண்களிலேயே முன்னிலையில் இருந்தன.

மாலை 4  மணி நிலவரப்படி மொத்தம் உள்ள மாவட்ட பஞ்சாயத்து, கவுன்சிலர் பதவிகளில் 34இடங்களில் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. அ.தி.மு.க. 2  இடங்களில்  மட்டுமே முன்னிலையில் இருந்தது.

திருநெல்வேலி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்.
 
மாவட்ட கவுன்சிலர் - 12 
திமுக - 7
காங்கிரஸ் (திமுக கூட்டணி) - 1
அதிமுக - 0
(அதிமுக கூட்டணி) பாஜக - 1
அமமுக - 0
மநீம - 0
நாதக - 0
பாமக - 0
தேமுதிக - 0 
பிற - 0

கட்சியின் பெயர்கட்சி அடிப்படையிலான பதவிகள்கட்சி அடிப்படையில்லாத பதவிகள்
ஊரகம்ஊரகம்
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கிராம ஊராட்சி தலைவர்கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்
மொத்த பதவியிடங்கள்3/15354/1421273/30073716/23211
போட்டி இன்றி தேர்வு251373221
போட்டி தேர்வு149136495
வேட்பு மனு தாக்கல் இன்மை / தேர்தல் நிறுத்தி வைப்பு01526
அ.இ.அ.தி.மு.க0200
பி.எஸ்.பி0000
சி.பி.ஐ0100
சி.பி.ஐ(எம்)0100
தே.மு.தி.க0000
தி.மு.க34800
இ.தே.கா0100
என்.சி.பி0000
மற்றவை012733716
மொத்தம்3552783742

தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தல்: 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை கைப்பற்றியது தி.மு.க
மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது வரையிலான நிலவரப்படி, திமுக அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
2. உள்ளாட்சி தேர்தலில் 90 வயது பெருமாத்தாள் வெற்றி - எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி
நெல்லை மாவட்டத்தில் தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3. உள்ளாட்சி தேர்தல் தி.மு.க வரலாற்று வெற்றி; 9 மாவட்ட முன்னிலை விவரங்கள்
வேலூரில் மொத்தமுள்ள 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
4. 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதத்தில் பெற்றுள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.