மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று திருமாவளவன் அறிக்கை + "||" + DMK in local elections Thirumavalavan's statement is a testament to the people's support for the success of the coalition

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று திருமாவளவன் அறிக்கை

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று திருமாவளவன் அறிக்கை
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று திருமாவளவன் அறிக்கை.
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாவட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 4 வார்டுகளில் மூன்று வார்டுகளிலும், ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் 43-ல் 27 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் வெற்றிக்கு அரும்பாடுபட்ட தொண்டர்களுக்கும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


மேலும், கூட்டணியை இணக்கமாகவும் வெற்றிகரமாகவும் வழிநடத்தி, சட்டசபை தேர்தலில் சாதித்ததைப் போலவே இத்தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மகத்தான வெற்றி தி.மு.க. அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கும், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் மக்கள் வழங்கியுள்ள நற்சான்றாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. பெற்றுள்ள வெற்றி கவுரவமானது டாக்டர் ராமதாஸ் அறிக்கை
உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. பெற்றுள்ள வெற்றி கவுரவமானது, மரியாதைக்குரியது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
2. ‘நீட்’ தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கை; கேரள முதல்-மந்திரியிடம் வழங்கிய திமுக எம்.பி.
‘நீட்’ தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கையை கேரள முதல்-மந்திரியிடம் திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் வழங்கினார்.
3. பரபரப்பை ஏற்படுத்தும் பண்டோரா புலனாய்வு அறிக்கை!
உலகில் நீண்ட நெடுங்காலமாகவே ஏதாவது ஒரு ரகசியத்தை அல்லது ஊழலை ஒரு தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்லது ஏதாவது அமைப்புகளோ வெளியிட்டால், அவர்கள் பண்டோரா பெட்டியை திறந்துவிட்டார்கள் என்று சொல்வார்கள்.
4. சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு
சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
5. சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு
சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.