பெகாசஸ் விவகாரம்: “பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வரும்” - ப.சிதம்பரம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Oct 2021 5:44 AM GMT (Updated: 2021-10-28T11:14:40+05:30)

பெகாசஸ் விவகாரம், அரசின் பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வர உள்ளதாக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு நேற்று காலை வெளியிட்டது. அதன்படி 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.  மேலும் இந்தியாவின் ரகசியத்தை காப்பது முக்கியம். தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு தனிமனித உரிமைகளும் முக்கியம். பத்திரிக்கையாளர் மட்டுமின்றி அனைத்து மக்களின் தனிநபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். சிறப்பு நிபுணர் குழுவின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக கண்காணிக்கும் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில்  பெகாசஸ் விவகாரம், பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வர உள்ளதாக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பெகாசஸ் சர்ச்சையை விசாரிக்கும் குழுவில் பலரை உறுப்பினராகக் கோரும் போது, "நாகரீகமாக நிராகரித்துவிட்டார்கள்" என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் கூறியிருப்பது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எந்தவொரு மனசாட்சியுள்ள குடிமகனும், தேசிய நலன் சார்ந்த ஒரு விஷயத்தில் பணியாற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்டின் கோரிக்கையை நிராகரிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

முன்னதாக தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், “இந்திய குடிமக்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது என்பது உத்தரவின் இரண்டாவது அடிப்படையாகும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடப்பட்ட விசாரணை, அரசின் பல சட்ட மீறல்களை வெளிக்கொண்டு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சுதந்திரத்தை விரும்பும் மக்கள் அனைவரும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை வரவேற்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.


Next Story