மாநில செய்திகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார் + "||" + Relief items for flood victims: Edappadi Palanisamy provided

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணப் பொருட்கள்:  எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க சார்பில் நிவாரணப் பொருட்கள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மூன்றாவது நாளாக இன்று, தமிழகத்தில் பெய்த பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம், கீழ்க்கட்டளை (அம்பாள் நகர்) பரம், உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். 

அப்போது,  அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், மகளிர் அணிச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சின்னையா உள்ளிட்ட  நிர்வாகிகள் உடனிருந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மொழிப்போர் தியாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
மொழிப்போர் தியாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
2. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கொரோனா கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
4. உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
5. 'தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்' - எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.