தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் -இந்திய வானிலை ஆய்வு மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Nov 2021 8:05 AM GMT (Updated: 15 Nov 2021 8:05 AM GMT)

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய வானிலை  ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது;-

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதுமேலும் மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் 17-ஆம் தேதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதன் காரணமாகவும், ஏற்கனவே உள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். 

குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை காற்று வீசும் என்பதால் இன்று தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்  என கூறப்பட்டு உள்ளது.

Next Story