மாநில செய்திகள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை- நெல்லை பேருந்து நிலையத்தை சூழ்ந்த வெள்ளம் + "||" + Heavy Rain lashes across tamil nadu

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை- நெல்லை பேருந்து நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை- நெல்லை பேருந்து நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 13-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை நாளை (வியாழக்கிழமை) நெருங்குகிறது.

மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், சிவகங்கை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  நெல்லையில் 3 மணி நேரமாக கனமழை கொட்டியது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.   நெல்லை பேருந்து நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா, தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...!
டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
3. அறுவடைக்கு தயரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின- விவசாயிகள் கண்ணீர்; சேதம் கணக்கெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
4. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
ஜனவரி 4ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மட்டும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
5. கொட்டி தீர்த்த கனமழை ...! சென்னையில் வெள்ளத்தில் மிதந்த 145 இடங்கள் ; 4 சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னையில் நேற்று மதியம் முதல் இரவு வரை சுமார் 10 மணிநேரம் விடாமல் கொடூரமாக மழை பெய்தது