மாநில செய்திகள்

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு: கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை சிறை + "||" + Case of making a Plus-1 student pregnant: Mercenary jailed until death

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு: கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை சிறை

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு: கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை சிறை
பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் மறவாமதுரை பக்கம் கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜ்குமார், பிளஸ்-1 மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.


இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனவுடன், அதை கலைக்க ஆஸ்பத்திரிக்கும் அழைத்து சென்றார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

சாகும் வரை சிறை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதற்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், அபராதம் ரூ.50 ஆயிரமும் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 100 பேர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வழக்கு-வருவாய்த்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வழக்கில் பதில் அளிக்க வருவாய்த்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
3. நீக்கப்பட்ட வரிகளை சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முழுமையாக பாட கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் நீக்கப்பட்ட வரிகளை சேர்த்து முழு பாடலையும் பாடவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
5. அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு