மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக குறைவு


மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக குறைவு
x
தினத்தந்தி 25 Nov 2021 5:13 AM GMT (Updated: 2021-11-25T10:43:44+05:30)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 13-ந் தேதி இரவு அணை 120 அடியை எட்டி நிரம்பியது. அன்றுமுதல் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே உபரிநீராக திறந்து விடப்பட்டு வந்தது.

அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்றைய தினம் அணைக்கான நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக இருந்தது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. அதே சமயம் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 93.63 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது.

Next Story