மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு நர்சுகள், சுகாதார பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு


மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு நர்சுகள், சுகாதார பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு
x
தினத்தந்தி 26 Nov 2021 10:59 PM GMT (Updated: 26 Nov 2021 10:59 PM GMT)

மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு நர்சுகள், சுகாதார பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

சென்னை,

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 36 லட்சத்து 31 ஆயிரத்து 843 பேர் மருத்துவ பயன்பெற்று உள்ளனர். இந்த நிலையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், புதிதாக நர்சுகள், சுகாதார பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்தவகையில் 4 ஆயிரத்து 848 நர்சுகள், 2 ஆயிரத்து 448 சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 296 பேரை பணியில் அமர்த்திக் கொள்வதற்கான அரசாணை நேற்று (நேற்று முன்தினம்) வெளியிட்டப்பட்டு உள்ளது. விரைவில் அவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Next Story